Pages

என்னை அறிந்தால் - ஐ படத்தின் ரிலீஸ் தேதியில் திடிர் மாற்றம்

என்னை அறிந்தால் - ஐ படத்தின் ரிலீஸ் தேதியில் திடிர் மாற்றம்



ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் உருவான 'ஐ' ஜனவரி 9ஆம் தேதியும், அஜீத்தின் 'என்னை அறிந்தால்' ஜனவரி 15ஆம் தேதியும் திரையிடப்படுகிறது என்ற செய்திகள் நேற்று வரை வெளியாகியிருந்தன. ஆனால் இன்று திடீரென 'ஐ' படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 14ஆம் தேதிக்கு மாற்றப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ள விளக்கம் ஒன்றில், 'பி' மற்றும் சி செண்டர்களில் உள்ள மக்கள் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள திரைப்படத்திற்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள் என்றும் ஒரு வாரத்திற்கு முன் வெளியான படத்திற்கு அதிக முக்கியத்துவம் தரமாட்டார்கள் என்ற தகவல் வந்ததால் இந்த தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஜனவரி 9ஆம் தேதி 'ஐ' படத்தை ரிலீஸ் செய்தால் பொங்கல் தினத்தில் ரிலீஸாகவுள்ள வேறு நடிகர்களின் படங்களுக்கு ஒருசில தியேட்டர்களை விட்டுக்கொடுக்குமாறு கோரிக்கை வந்துள்ளதாலும் இந்தமுடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது ஐ மற்றும் என்னை அறிந்தால் ஆகிய இரு திரைப்படங்களும் ஒரே நாள் இடைவெளியில் வெளியாவதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் விஷாலின் ஆம்பள, கார்த்தியின் கொம்பனும் ரிலீஸ் ஆவதால் இந்த பொங்கல் நான்கு முனை போட்டியை உருவாக்கியுள்ளது.