சிவா படத்தில் புதிய கெட்டப்பில் அஜித்!

அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படம் ரிலிஸான கையோடு அஜித், வீரம் படத்தை இயக்கிய சிவாவின் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார்.
வீரம் படத்தில் வேஷ்டி, சட்டையில் நடித்து கலக்கிய அஜித், இந்த படத்தில் தன் வழக்கமான ஸ்டைலிஷ் லுக்கிற்கு மாறவுள்ளாரம்.
மேலும், அஜித்தை இதுவரை பார்த்திராத ஒரு புது கெட்டப்பாக இருக்க வேண்டும் என படக்குழு தீவிரமாக ஆலோசித்து வருகிறதாம்.