அஜித் படத்திற்கு அமெரிக்காவில் ப்ரீமியர் காட்சி!
 அஜித் படங்கள் என்றாலே எதிர்ப்பார்ப்பிற்கு பஞ்சம் இருக்காது. அந்த  வகையில் என்னை அறிந்தால் படத்திற்கு தமிழ் நாடு மட்டுமின்றி கேரளா,  கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாட்டு தமிழர்களிடையேயும் நல்ல வரவேற்பு  இருக்கிறது.
இப்படத்தின் அமெரிக்கா வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளது  ATMUS நிறுவனம். இந்நிறுவனம் இப்படத்திற்கு அங்கு ப்ரீமியர் காட்சி  ஏற்பாடு செய்துள்ளதாம்.
ஜனவரி 29ம் தேதி படம் ரிலிஸ் ஆக யுஎஸ்ஸில் 28ம் தேதி மாலை ப்ரீமியர் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
